• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கல்கிசை நீதிமன்ற வளாக சம்பவம் - பொலிஸ் கான்ஸ்டபிள் இடமாற்றம்

இலங்கை

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் ஒரு சட்டத்தரணியுடன் நடந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள், கல்கிசை பொலிஸ் நிலையத்திலிருந்து பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த இடமாற்றம் இன்று (14) முதல் அமலுக்கு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சருமான மினுர செனரத் தெரிவித்தார்.

கல்கிசை நீதிமன்ற வளாகத்திற்குள் ஒரு சட்டத்தரணியை தாக்கிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளை பிணையில் விடுவிக்க கல்கிசை நீதவான் நீதிமன்றம் நேற்று (13) உத்தரவிட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்ற வளாகத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, பொலிஸ் கான்ஸ்டபிள் சட்டத்தரணியை தாக்கியதாகக் கூறப்பட்டது.
 

Leave a Reply