ஸ்லோவாக்கியாவில் நேருக்கு நேர் மோதிய இரு ரயில்கள் - பலர் காயம்
ஸ்லோவாக்கியாவின் கிழக்கு பகுதியில் திங்கட்கிழமை ஏற்பட்ட ரயில் விபத்தில் பல பயணிகள் காயமடைந்தனர்.
இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில், ஒரு இயந்திரமும் சில பெட்டிகளும் தடம் புரண்டதாக ஸ்லோவாக்கியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் போது, இரு ரயில்களிலும் சுமார் 80 பயணிகள் இருந்துள்ளார்கள்.
இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






















