குருநாகல் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை- சந்தேகநபர் கைது
இலங்கை
குருணாகலை, குடா கல்கமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர் 34 வயதான பப்போலேவெல, குடா கல்கமுவ பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனது சகோதரரின் வீட்டில் மற்றொரு குழுவுடன் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், விசாரணையில் சகோதரர் அவரை வாளால் தாக்கி கொலை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.























