ஹரிணி அமரசூரிய சீனாவின் பெய்ஜிங்கி நகரை சென்றடைந்துள்ளார்
இலங்கை
2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஹரிணி அமரசூரியா இன்று காலை சீனாவின் பெய்ஜிங்கி நகரை சென்றடைந்துள்ளார்.
சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்றிரவு நாட்டில் இருந்து புறப்பட்டிருந்தார்.
இன்று காலை சீனாவின் பெய்ஜிங்கி நகரை சென்றடைந்த பிரதமருக்கு
சீன வானொலி மற்றும் தொலைக்காட்சிக்கான இணை அமைச்சர் காவ் சுமின் வரவேற்றார்.
பயணத்தின் முதல் நாளான இன்று பிரதமர் தடைசெய்யப்பட்ட நகரம் மற்றும் சீனப் பெருஞ்சுவரைப் பார்வையிட்டார்.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான தடைசெய்யப்பட்ட நகரம் ஏகாதிபத்திய கட்டிடக்கலை மற்றும் தேசிய அளவில் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னத்தின் அடையாளங்களாக கருதப்படுகின்றது.
மேலும் சீனாவின் வரலாற்று மற்றும் கலை மதிப்பை நிரூபிக்கும் சீனப் பெருஞ்சுவர், சீனாவின் பாதுகாக்கப்பட்ட சின்னமாகும்.
எதிர் வரும் நாட்களில், பிரதமர் 2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கியாங் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பீஜிங்கில் நடைபெறவுள்ள மாநாடானது, “பகிரப்பட்ட ஓர் எதிர்காலம் பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட செயல்முறை” என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் ஹரினி அமரசூரியவின் விஜயத்தின் போது, பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளடக்கிய கொள்கை சீர்திருத்தங்களில் இலங்கையின் முன்னேற்றத்தை எடுத்துரைக்கும் முக்கிய உரை ஒன்றை நிகழ்த்த உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






















