சேலை கட்டி வந்த ரயிலுடா - சிம்ரன் இன்ஸ்டாவில் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்
சினிமா
தமிழ் திரை உலகில் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் சிம்ரன்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான "டூரிஸ்ட் பேமிலி" படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தில் சிம்ரன் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்நிலையில், சிவப்பு நிறத்தில் சேலை கட்டி நடந்து வரும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சிம்ரன் பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.























