நமது ஊரை நாம் எவ்வளவு மதிக்க வேண்டும் என்பது புரிகிறது - தனுஷ்-க்கு செல்வராகவன் வாழ்த்து
சினிமா
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். அண்மையில் வெளியான 'இட்லி கடை' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இட்லி கடை படத்தை இயக்கி நடித்த தனுஷ்-க்கு அவரின் அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இட்லி கடை ! நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிலேயே நிற்கும் ஒரு படம். கருப்பு சாமியும் கன்று குட்டியும் கண்களை கலங்க வைக்கின்றனர். நமது ஊரை நாம் எவ்வளவு மதிக்க வேண்டும் என இப்பொழுதுதான் புரிகின்றது. வாழ்த்துக்கள்
தனுஷ் (@dhanushkraja) தம்பி என கூறினார்.






















