இசைஞானி மீது இருப்பது கலைப்பாசம்.. தமிழ்ப்பாசம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சினிமா
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் விருதாளர்ளுக்கு கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இயல், இசை, நாடகக்கலையில் பல ஆண்டுகளாக சேவை செய்பவர்களை கவுரவிக்கும் விதமாக 90 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிலையில், கலைமாமணி விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்," என் மேல் ஏன் இவ்வளவு பாசம்? என இசைஞானி இளையராஜா கேட்டார்.
அவர் மீது நமக்கு இருப்பது கலைப்பாசம், தமிழ்ப்பாசம், தமிழர் என்கிற பாசம். அதனால்தான் பாராட்டு விழா நடத்தினோம்" என்றார்.






















