1972 அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி.. ஆகாசவாணி! செய்திகள்! வாசிப்பது சரோஜ் நாராயணசாமி!
சினிமா
1972 அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி.. 'ஆகாசவாணி! செய்திகள்! வாசிப்பது சரோஜ் நாராயணசாமி!' அன்று அனைத்து வானொலி பெட்டிகளும், டெல்லியிலிருந்து ஒலிபரப்பான தமிழ் தலைப்புச் செய்தி ஒன்றை அலறிக்கொண்டு ஒலிபரப்பின.
தான் வளர்த்து வாழவைத்த திமுகவிலிருந்து எங்கள் தங்கம் எம்ஜியாரை நீக்கிவைக்கப் பட்டிருப்பதற்கான அலரல் செய்திதான் அது. பட்டி தொட்டியெங்கும் வந்த பிரளயமும்ம் ,புகம்பமுமாக வந்த அதிர்ச்சி அலைகளே... அலட்சியமாக நினைத்து பின் ஆடித்தான் போனார் தீயசக்தி கருணா..
திராவிட இயக்கமொன்று பெரும்பிளவைச் சந்தித்ததில் அதிகாரவர்க்கத்தினருக்கு ஆனந்தம் பரமானந்தம். ஆனால் இந்தச் செய்தியை முடிவெடுத்து கொள்ளைக் கூடாரத்தை காக்க கருணாநிதி எத்தனை இரவுகள் சிந்தித்தாரோ தெரியாது. ஆனால் என் இதயத்திலிருந்து அண்ணாவின் இதயக்கனியை அறுத்து எறிந்துவிட்டேன் என்று அறிக்கை வெளியிட்டார்.
புழுதி அள்ளி தூற்றாத ஜனமில்லை, கல்லடி சொல்லடி என்பார்களே அவற்றை முதலமைச்சர் என்கிற முறையில் கருணாநிதி சந்திசிரிக்க சந்தித்தார்..
தமிழகமெங்கும் பல இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது. வெகுண்டெழுந்தது தெய்வம் எம்ஜியாரின் ரசிகர் கூட்டம். பேருந்துகள் ஓடவில்லை. பள்ளிகள் பூட்டப்பட்டன. வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். எம்ஜியார் என்று அடையாளம் இல்லாமல் ஒரு அணுவையும் அசையவிடவில்லை
மக்கள் சக்தி...
சில அரசியல் கட்சிகள் அதிலும் குறிப்பாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் எம்ஜியாரைத் தாங்கள் இயக்கத்துள் இழுக்கவும் வலை வீசின. தலைநகர் டில்லியில் இருந்த தங்களின் அலுவலகங்களுக்கு அழைத்துப் போயின. அத்தகைய கட்சிகள் நினைத்ததெல்லாம் ஒரு புகழ் வாய்ந்த திரைப்பட நடிகர் நமது கட்சிக்குள் வந்தால் கட்சிக்கு இலாபம் என்ற வகையிலேயே கணக்குப் போட்டன.
ஆனால் எல்லாம் வல்ல எம்ஜியார் அனைவரின் கணக்கையும் பொய்யாக்கினார். 1972 அக்டோபர் மாதம் 17 ஆம் நாள் 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்கிற பெயரில் தனிக் கட்சி கண்டார். முன்னர் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியின் கருப்பு சிவப்புக்கு இடையே வெள்ளை நிறம் கொடுத்து அதில் அண்ணாவின் படத்தைப் பொறித்தார். இந்த யோசனையை எம்ஜியாருக்கு வழங்கியவர் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் எம்.கல்யாண சுந்தரம் .அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவான செய்தி அறிந்த மக்கள் வெள்ளம சென்னை லாயிட்ஸ் சாலையில் இருந்த இதய வேந்தர் எம்ஜியாரின் அலுவலகம் மற்றும் இல்லங்களை நோக்கி ஆதரவு கோஷத்துடன் படை என திரண்டு திக்கு முக்காடியது சென்னை.
கே. ஏ. மதியழகனும், அவரது சகோதரர் கிருஷ்ணசாமியும் எம்ஜியாருக்கு வலது கரமாக செயல்பட்டனர். அத்துடன் நாராயணசாமி முதலியார் என்கிற சட்ட மேதையும் துணை நின்றார் வற்றாத நம் வரலாறு வலிக்கவும் செய்யும் இனிக்கவும் செய்யும்.






















