யாழ் பிரபல பாடசாலை ஒன்றின் பெயர் மாற்றம்
இலங்கை
யாழ்ப்பாணம் கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலையின் பெயரினை யாழ்ப்பாணம் நல்லூர் சைவத்தமிழ் கலவன் பாடசாலை என செய்வதற்கான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நாளைய தினம் (12) காலை 10 மணிக்கு பெயமாற்றம் தொடர்பிலான கலந்துரையிடலும் , பாடசாலை அபிவிருத்தி சங்க விசேட கூட்டமும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் பெயரை மாற்றுவது குறித்து ஜே - 112 கிராம சேவையாளர் பிரிவின் முதியோர் நலன்புரி சங்கத்தினால் , கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி வடமாகாண கல்வி அமைச்சுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டதுடன் , அதன் பிறந்து வடமாகாண ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
யா / கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலை பழைய மாணவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், யா / கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலை 1930ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.





















