• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முன்னெப்போதும் இல்லாத வன்முறை தாக்குதல் - பாகிஸ்தானுக்கு தலிபான் அரசு கடும் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் செயல்படும் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் அடிக்கடி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இதற்கு பாகிஸ்தானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்குள் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினரை குறிவைத்து பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது.

தலைநகர் காபூலின் கிழக்கு பகுதியில் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு தலைவர் நூர் வாலி மெஹ்சுத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தாக்குதலில் இருந்து நூர் வாலி தப்பி பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரது மகன் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே காபூலில் 2 சக்தி வாய்ந்த குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டது என்றும், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்தது என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். நகரின் வான்வெளியில் ஒரு போர் விமானத்தின் சத்தம் கேட்டதாகவும் தெரிவித்தனர்.

இதற்கிடையே ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள மார்க்கெட் மீதும் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

பாகிஸ்தானின் இந்த தாக்குதல் முன்னெப்போதும் இல்லாதவை, கொடூரனமாவை, தங்களுடைய வான்வெளியை மீறியதாக பாகிஸ்தான் மீது தலிபான் அரசு குற்றம்சாட்டியுள்ளது.

அரசின் தலைமை செய்திதொடர்பாளர் ஜபிகுல்லா முஜாஹித் கூறுகையில் "அந்த நேரத்தில் அங்கு காயம் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. அது ஒரு விபத்து. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

ஆனால், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் இன்று "இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான்தான் பொறுப்பு. கிழக்கு மாகாணமான பாக்தியாவிலும் தாக்குதல் நடத்தப்பட்டது" எனத் தெரிவித்துள்ளது. காபூலிலில் விமானங்கள் சுட்டுவீழ்த்த முடியாத வகையில் எப்படி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது என்பது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் ஏதும் தெரிவிக்கவில்லை.

இந்த தாக்குதல் முன்எப்போதும் இல்லாதது, வன்முறையானது. கொடூரமானது. இந்த சூழ்நிலை இன்னும் மோசமானால் பாகிஸ்தான் ராணுவம் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

2022ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா காபூர் நகர் மீது தாக்குதல் நடத்திய பிறகு, நடத்தப்படும் முதல் தாக்குதல் இதுவாகும்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்தபின், முதன்முறையாக இந்தியாவில் ராஜாங்கரீதியிலான பேச்சுவார்த்தையில் தலிபான் அரசு ஈடுபட்ட நிலையில், பாகிஸ்தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பகிரங்கமாக குற்றம்சாட்டிய 48 மணி நேரத்திற்குள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply