தங்கம் வாங்க தாய்லாந்து, வியட்நாமில் கியூவில் நிற்கும் மக்கள்
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், சில நாடுகளில் மக்கள் தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, தாய்லாந்து மற்றும் வியட்நாமில் உள்ள நகையங்களுக்கு அருகில் வரிசைகள் காணப்படுவதாக அறியமுடிகிறது.
உலக வரலாற்றில் தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அதன் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $4,000 ஐ தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.























