சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய
இலங்கை
“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயம் ஒக்டோபர் 12 முதல் 15 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த பயணத்தின் போது பிரதமர், ”ஒரு பகிரப்பட்ட எதிர்காலம்: பெண்களின் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சிக்கான புதிய, துரிதப்படுத்தப்பட்ட செயல்முறை” என்ற தலைப்பில் உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றுவார்.
அத்துடன் பிரதமர், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், பிரதமர் லி உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகளுடனும் சந்திப்புக்களை நடத்துவார்.






















