• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலகின் முதல் சைவ கட்டழகன் காலமானார்

இலங்கை

நடிகரும் தொழில்முறை உடற் கட்டழகன் வரீந்தர் குமான் வியாழக்கிழமை (09) பஞ்சாபின் அமிர்தசரஸில் காலமானார். 

இவர் உலகின் முதல் சைவ உடற் கட்டழகன் என்று பரவலாக அறியப்படுகிறார்.

42 வயதான இவர் திரைப்படங்களில் நிலையான வாழ்க்கையைக் கொண்டிருந்தார்.

அதே நேரத்தில் அவர் 2023 இல் வெளியான ‘டைகர்-3’ படத்தில் நடிகர் சல்மான் கானுடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொண்டார்.

6 அடி 2 அங்குல உயரமுள்ள வரீந்தர் குமான், 2009 இல் மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்றார்.

மேலும் மிஸ்டர் ஆசியா போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாரடைப்பால் குமான் காலமானார் என்று அவரது குடும்பத்தினரை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் PTI செய்தி வெளியிட்டுள்ளது. 

தோள்பட்டை வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக நடிகர் அமிர்தசரஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றதாக குமானின் முகாமையாளர் யத்விந்தர் சிங் தெரிவித்தார்.

மாலையில் வைத்தியசாலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
 

Leave a Reply