• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மஸ்கெலியா தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து

இலங்கை

மஸ்கெலியா, லக்சபான தோட்டம் –  வாழமலை பிரிவில் உள்ள  தேயிலை உற்பத்தி தொழிற்சாலையில் இன்று அதிகாலை (08) சுமார் 12.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  

இதனால், தொழிற்சாலை முற்றாக தீக்கிரயைாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயை அணைக்க தோட்ட தொழிலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் நல்ல தண்ணி பொலிஸ் அதிரடி படையினர் முன் வந்த போதும் தீயை அணைக்க முடியவில்லை தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்ததாக தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

எனினும், பின்னர் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
 

Leave a Reply