நீச்சல் பயிற்சியின் போது உயிரிழந்த 5 வயது சிறுவன்
இலங்கை
மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுகேகொடை பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சில் குளத்தில் மூழ்கி சிறுவன் ஒருவர் நேற்று (08) உயிரிழந்துள்ளார்.
நுகேகொடை, தலபதபிட்டியவில் வசித்து வந்த 05 வயதுடைய சிறுவன் ஒவருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணகளில், ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பிற மாணவர்களுடன் பயிற்றுவிப்பாளர் ஒருவரால் நடத்தப்பட்ட நீச்சல் பயிற்சி நடவடிக்கையின் போது இந்த விபரீதம் நடந்துள்ளதாக தெரியவருகிறது.
உயிரிழந்த சிறுவனின் உடல் மேலதிக பரிசோதனைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.























