சொந்த நாட்டு மக்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்திய மியான்மர் ராணுவம் - 40 பேர் உயிரிழப்பு
மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. ஆங் சான் சூகி உள்ளிட்ட ஆளுங்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மியான்மரின் சாங் யூ நகரில் புத்தமத பண்டிகையின் போது, ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்திய மக்கள் மீது மியான்மர் ராணுவம் வெடிகுண்டுகள் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 80 பேர் படுகாயம் அடைந்தனர்.





















