தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் திருச்செந்தூர் கோவிலில் தரிசனம்
சினிமா
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பார்க்கிங் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.
அவர் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்தார். கோவிலில் மூலவர், சண்முகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி, தெய்வானை மற்றும் பெருமாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்தார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இலை விபூதி பிரசாதமாக வழங்கப்பட்டது. கோவிலில் இருந்து வெளியே வந்த அவருக்கு பக்தர்கள் வாழ்த்துகள் தெரிவித்தும், செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.






















