இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு அதிகரிப்பு
இலங்கை
இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 செப்டெம்பர் மாதத்தில் 1.1% அதிகரித்து 6.24 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
இந்த தொகை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 6.17 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
எனினும், இந்த எண்ணிக்கையில் சீன மக்கள் வங்கியுடனான (PBOC) பரிமாற்ற ஒப்பந்தத்திலிருந்து கிடைக்கும் வருமானம் அடங்கும்.
இது சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமம்.
இது பயன்பாட்டுத்தன்மை குறித்த நிபந்தனைகளுக்கு உட்பட்டது.























