
அவர்கள் புத்திசாலிகள்.. இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் - டிரம்ப்
மத்திய கிழக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நடைபெற்ற அமெரிக்க-சவுதி முதலீட்டு மாநாட்டில் உரையாற்றினார்.
அப்போது "இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது" என்று அவர் கூறினார். ஏற்கனவே 2 முறை டிரம்ப் இவ்வாறு பேசியது இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது மீண்டும் இதுபற்றி பேசிய டிரம்ப், "நாம் வர்த்தகம் செய்வோம் என்று நான் சொன்னேன். இரு நாடுகளிலும் வலுவான, செல்வாக்கு மிக்க புத்திசாலி தலைவர்கள் உள்ளனர்.
எல்லாம் நின்றுவிட்டது, நிலைமை அமைதியாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தியாவும் பாகிஸ்தானும் இப்போது ஒன்றாக ஒரு நல்ல இரவு உணவை அனுபவிக்கலாம். அவர்கள் ஏவுகணைகளுக்குப் பதிலாக பொருட்களை வர்த்தகம் செய்ய வேண்டும். பதற்றம் மேலும் அதிகரித்திருந்தால், மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கக்கூடும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக வர்த்தகத்தில் கை வைப்பேன் என்று மிரட்டி டிரம்ப் போர் நிறுத்தம் கொண்டு வந்ததாக கூறப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம் குறித்து எதுவும் பேசவில்லை என இந்தியா மறுத்தது குறிப்பிடத்தக்கது.