• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிள்ளையின் உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய தந்தை

இலங்கை

தனது சிறு பிள்ளையின் உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய தந்தை தலைமறைவாகியுள்ள சம்பவம் யாழ்ப்பாணம் இளவாலைப் பகுதியில் பதிவாகியுள்ளது.

இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆறு வயதான சிறு பிள்ளை உணவு உட்கொண்ட பின் வாயிலிருந்து நுரை வெளியேறியதை அடுத்து குடும்பத்தினர் குழந்தையை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

விசாரணையில் உணவில் கிருமிநாசினி கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விசாரணைகளை அடுத்து குழந்தைக்கு உணவூட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

அவரை கைது செய்ய இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply