• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கோவையில் நடைபெற இருந்த என்னுடைய இசைக் கச்சேரி ஜூன் 7-ம் தேதிக்கு மாற்றம்- இளையராஜா

சினிமா

கோவை புதூரில் வரும் 17-ந்தேதி நடைபெற இசைஞானி இளையராஜாவின் இசைக்கச்சேரி அடுத்த மாதம் 7-ந்தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இசைஞானி இளையராஜா வீடியோ மூலம் தெரிவித்துள்ளதாவது:-

பேரன்புமிக்க ரசிகர் பெருமக்களே... வருகிற 17-ந்தேதி கோவையில் நடைபெற இருந்த என்னுடைய இசை நிகழ்ச்சி தவிர்க்க முடியாத காரணங்களால் ஜூன் 7-ந்தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஏன் இந்த மாற்றம் என்று நீங்கள் கேட்கலாம்..

உங்களுக்கே தெரியும்... நாடு தற்போது இருக்கும் பதற்றமான சூழ்நிலையில் இசை நிகழ்ச்சியை வைத்தால் நன்றாக இருக்காது என்பதால் தள்ளி வைத்துள்ளோம். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இந்த தேதி மாற்றம் யுத்தத்தின் காரணமாக மாற்றி வைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.. வணக்கம்.
 

Leave a Reply