• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரம்பொடை பேருந்து விபத்து-விசேட குழு நியமனம்

இலங்கை

ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் மேலும் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் உள்ளடங்குவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பேருந்து விபத்துக்கான காரணங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்கில் மேற்படி குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொத்மலை, ரம்பொட, கெரண்டியெஎல்ல பகுதியில் 22 பேரின் உயிரைப் பறித்த விபத்து, பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நிகழவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன்படி, பேருந்தில் அளவுக்கு மீறிய பயணிகள் பயணித்தமை மற்றும் அதிக களைப்பு காரணமாக சாரதிக்கு உறக்கம் ஏற்பட்டமை ஆகியவை விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகனப் பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பாக விசேட குழு மூலம் தற்போது விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
 

Leave a Reply