• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பெருந்தொகையான போதைப்பொருளுடன் பிரித்தாணிய பெண் ஒருவர் இலங்கையில் கைது

இலங்கை

460 மில்லியன் ரூபா பெறுமுதியுடைய ஒரு தொகை போதைப்பொருளுடன் பிரித்தானிய பெண் ஒருவர் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்தின் பாங்கொக் நகரில் இருந்து இலங்கைக்கு பயணித்த பிரித்தானிய பெண் ஒருவரால் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட ஒரு தொகை குஷ் போதைப்பொருள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை விமான நிலையத்தில் அண்மைய காலத்தில் கைப்பற்றப்பட்ட பாரிய போதைப்பொருள் தொகை இதுவாகும் எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டதுடன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த எடை 46 கிலோகிராம் என்றும், அது 460 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சந்தேக நபரையும் போதைப்பொருள் பொதியையும் மேலதிக விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

Leave a Reply