அடுத்தடுத்து ரிலீஸ் தேதியை அறிவித்த பிரதீப் ரங்கநாதன்
சினிமா
இயக்குனர் விக்னேஷ் சிவன் லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
இந்தப் படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோர் நடித்துள்னர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது, தனது காதலை அடைவதற்காக எதிர்காலத்திற்கு டைம் டிராவல் செய்யும் கதையாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் முதல் பாடலான தீமா தீமா பாடல் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஹிட்டானது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியாகிறது.
அடுத்ததாக அக்டோபர் மாதம் பிரதீப் நடிப்பில் ட்யூட் திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.























