
மீண்டும் கெனிஷாவுடன் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்..
சினிமா
நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தனக்கு விவாகரத்து வேண்டும் என ரவி கேட்கும் நிலையில், விவாகரத்து தரமாட்டேன் என ஆர்த்தி கூறி வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடன் கிசுகிசுக்கப்பட்ட பாடகி கெனிஷாவுடன் ஐசரி கே கணேஷின் மகள் திருமணத்தில் ரவி கலந்துகொண்டார். இது மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
இதுகுறித்து ஆர்த்தி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இதன்பின் ராதிகா, குஷ்பூ போன்ற நடிகர்கள் ஆர்த்திக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.
கெனிஷாவுடன் ரவி மோகன் ஜோடியாக திருமணத்தில் கலந்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மீண்டும் இருவரும் ஜோடியாக சென்றுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
ஐசரி கே கணேஷ் மகளின் திருமண ரிசப்ஷனில் ரவி மோகன் - கெனிஷா இருவரும் ஜோடியாக சென்று கலந்துகொண்டனர். இது எரிய தீயில் எண்ணெய்யை ஊற்றுவதுபோல் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.