
30 நாள் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு தயார் - உக்ரைன் நிதியமைச்சர் சொல்கிறார்
உக்ரைன் ரஷியா போர் தொடுத்து 3 வருடங்கள் நிறைவடைந்து 4ஆவது வருடமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் போர் நிறுத்தத்திற்கு முயற்சி மேற்கொண்டன. ஆனால் ரஷியாவும், உக்ரைனும் பேச்சுவார்த்தைக்கு முன்வர சம்மதிக்கவில்லை.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதும் உக்ரைன்- ரஷியா இடையே 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கான பரிந்துரையை வழங்கியது. இதனால் உக்ரைன் ஏற்றுக்கொண்டது. ஆனால் ரஷியா ஏற்றுக்கொள்ளவில்லை.
கடந்த சில வாரங்களாக அமெரிக்கா பிரான்ஸ், இங்கிலாந்து உளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த நிலையில் ரஷியாவுக்கு போர் நிறுத்தம் அழுத்தத்தை கொடுக்கும் வகையில் பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து மற்றும் இங்கிலாந்து அதிகாரிகள் உக்ரைன் சென்றுள்ளனர்.
அவர்கள் உக்ரைன் அதிபரை சந்தித்து பேசினர். அப்போது வருகிற திங்கிட்கிழமையில் இருந்து 30 நாள் போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தியதாக தெரிகிறது. இதை உக்ரைன் அதிபர் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக உக்ரைன் நிதியமைச்சர் அந்த்ரி சிபிஹா "ரஷியாவோ முழுமையான, நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் மற்றும் அதன் நட்பு நாடுகள் தயாராக உள்ளனர்" எனத் தெரிவித்தார்.
உக்ரைன் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், ரஷியாவுக்கு மேற்கத்திய நாடுகள் அழுத்தம் கொடுக்கும் எனத் தெரிகிறது. ஆனால் ரஷியா போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளுமா? எனத் தெரியவில்லை.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 80ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் ரஷியா 3 நாள் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், 700-க்கும் மேற்படட முறை அதை மீறியதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.