• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வங்கதேசம், துருக்கி முதல் இங்கிலாந்து வரை.. இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் குறித்து 

3 நாட்கள் தொடர் தாக்குதலை அடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று மாலை சண்டையை நிறுத்த ஒப்பந்தம் செய்தன. அடுத்தகட்ட பேச்சுரவார்த்தை மே 12 இல் நடக்க உள்ளது. சண்டையை நிறுத்த அமெரிக்கா பெரிய வங்கு வகித்ததாக அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.

இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து உலக நாடுகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றன.

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறுகையில், "இரு நாடுகளுடனும் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினேன். தெற்கு ஆசியாவில் அமைதியை நிலை நாட்ட இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை கடைபிடிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

வங்கதேச இடைக்கால அரசுத் தலைவர் முகமது யூனுஸ் தனது எக்ஸ் பக்கத்தில், "உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும், பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பையும் நான் மிகவும் மனதாரப் பாராட்டுகிறேன்.

அதிபர் டிரம்ப் மற்றும் வெளியுறவுச் செயலாளர் மார்க் ரூபியோ ஆகியோரின் பயனுள்ள மத்தியஸ்தத்திற்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜதந்திரம் மூலம் வேறுபாடுகளைத் தீர்க்க வங்காளதேசம் எங்கள் இரு அண்டை நாடுகளையும் தொடர்ந்து ஆதரிக்கும்," என்று பதிவிட்டுள்ளார்.

"இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒப்புக் கொள்ளப்பட்ட போர்நிறுத்தம், போர் விரிவுபடும் சுழலில் இருந்து வெளியேறுவதற்கான முதல், முக்கியமான படியாகும். உரையாடல் முக்கியமானது" என்று ஜெர்மன் வெளியுறவு அலுவலகம் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.

துருக்கி வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். போர் நிறுத்தத வாய்ப்பை பயன்படுத்தி நேரடி மற்றும் ஆரோக்கியமான பேச்சுவார்த்தையை ஏற்படுத்துமாறு இரு தரப்பினரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

தெற்காசியாவில் நிலையான ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக, பயங்கரவாதம் மற்றும் இதுபோன்ற மோதலை தடுப்பதற்கான பேச்சுவார்த்தை வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளது. முன்னதாக துருக்கி பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகள் செய்தது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply