• Welcome to TamilsGuide
செய்திகள் 1

என் தம்பி எம்ஜியார் அவர்கள் புகழின் உச்சியில் இருந்தும்...

சினிமா

" என் தம்பி எம்ஜியார் அவர்கள் புகழின் உச்சியில் இருந்தும், உல்லாசமாக வாழுவதற்கு வசதியிருந்தும் அவர் ஏன் நம்மோடு சேர்ந்து இவ்வளவு பேர்களின் வெறுப்புக்கு ஆளாயிருக்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும். கலையுலகத்தில் அவரைச் சூழ இருக்கின்றவர்களில் பலர், வெறுப்புக் கண்ணோடு அவரைப் பார்க்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.

நமது வளர்ச்சியை யாரும் இன்றைய தினம் தடுக்க முடியவில்லை. கலையுலகில் பொருளும், புகழும் அடையாலம் ஆனால் மக்களுடைய அன்பு அனைவருக்கும் கிடைப்பதல்ல. எனக்கு 51 வயது ஆகிறது. எனக்குத் தெரிந்த வரையில் கலைவாணர் .என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் மக்களுடைய உள்ளத்தி்லே அன்பாகக் பாராட்டப்பட்டுப் பெரும் புகழ் அடைந்தார். அதற்குப்பின் தம்பி எம்.ஜி.ஆர் மக்கள் மனதில் நிறைய அன்பினைப் பெற்றிருக்கிறார்.

இதை ஏன் நான் குறிப்பிடுகிறேன் என்றால், இங்குள்ள தோழர்கள் சிலருக்கு எதிர்ப்பு அதிகம் இருக்கிறது என்று சொல்லும் நண்பர்கள் நமது எம்.ஜி.ஆர் அவர்களை நினைத்துக் கொள்ள வேண்டும். எதிர்ப்புக்களை நாம் சமாளித்தாக வேண்டும்.

எம்.ஜி.ஆர் அவர்கள் நாம் யாரும் அழைத்து நமது கழகத்தில் வந்து சேர்ந்தவர் அல்ல. அவர் மக்களின் அன்பைப் பெறுவதற்கு என்ன வழி என்று பலநாள் சிந்தித்து, மக்களுக்காகப் பாடுபடும் கட்சி எது என்று ஆராய்ந்து கடைசியில் நமது கழகத்தில் வந்து சேர்ந்தார். நமது கழகத்தில் இருக்கின்ற தோழமையும் கொள்கையிலுள்ள அழுத்தமும் அவரை இங்கே அழைத்துக் கொண்டு வந்தது ! "

- அறிஞர் அண்ணா

Leave a Reply