• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பில் வர்த்தக நிலைய தொகுதியில் தீ விபத்து

இலங்கை

கொழும்பு 12 வோக்ஷோல் வீதியில் உள்ள வர்த்தக நிலையதொகுதியொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்பு 12 வோக்ஷோல் வீதியில் உள்ள வர்த்தகநிலையதொகுதியொன்றில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்பு 12 வோக்ஷோல் வீதியில் அச்சு இயந்திரங்கள் எழுதுகருவிகள் விற்பனைசெய்யும் கடையொன்றிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை சுமார் 5 தீயணைப்பு வாகனங்களின் ஒத்துழைப்புடன் கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மின்கசிவு காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு ஆமர் வீதியில் உள்ள கடை வரிசையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்ப கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 

Leave a Reply