
பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை தாக்கிய ஐஎன்எஸ் விக்ராந்த்..
ஆபரேஷன் சிந்தூா் எதிரொலியாக நேற்று இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.
இதற்க்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில் அரபிக் கடலில் பாதுகாப்புக்காக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் அதிநவீன போர்க் கப்பலான விக்ராந்த், பாகிஸ்தானின் கராச்சி நகரைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கராச்சி துறைமுகம் தாக்கப்பட்ட சித்தரிக்கும் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இவை போலியானவை என்று உண்மை சரிபார்ப்பு மூலம் தெரிய வருகிறது. காசாவில் 2020 நடந்த தாக்குதலின் புகைப்படத்தை தவறாக கராச்சி துறைமுகம் என்று பகிரப்படுவதாக தெற்காசியாவில் தவறான தகவல் போக்குகளைக் கண்காணிக்கும் அங்கிதா மஹலனோபிஷ் தெரிவித்தார்.
மேலும் எக்ஸ் தளத்தின் குரோக் சாட்பாட்டும் இதை அவை போலியானவை என்று உறுதி செய்துள்ளது. மேலும் கராச்சி துறைமுக கள தகவல்களும் இதை உறுதிப்படுத்தி உள்ளன.