
எங்களுக்கு சீனா, துருக்கி, அஜர்பைஜான் தெளிவான ஆதரவை வழங்க முன்வந்துள்ளன - பாகிஸ்தான் அமைச்சர்
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும் என உலகின் பெரும்பாலான நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இந்த நிலையில் எங்களுடைய நண்பர்களான சீனா, துருக்கி, அஜர்பைஜான் இந்தியா- பாகிஸ்தான் மோதலில் பாகிஸ்தானுக்கு தெளிவான ஆதரவு வழங்க முன்வந்துள்ளன என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் பாகிஸ்தான் அரசு தினசரி அடிப்படையில் ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, சீனா, கத்தார் உடன் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளது என்றார்.
மேலும் "இஸ்ரேலைத் தவிர இந்தியாவுக்கு எந்த நாடும் ஆதரவாக இல்லை. உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த விவகாரத்தில் நடுநிலை வகிக்கின்றன" என்றார்.