• Welcome to TamilsGuide
செய்திகள் 1

2-வது திருமணமா? வைரலாகும் ரவி மோகனின் லேட்டஸ்ட் புகைப்படம்

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி மோகன் (ஜெயம் ரவி). கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சுமார் 15 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி கடந்த ஆண்டு விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியது. தற்போது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக கூறினாலும் இவர்களின் விவாகரத்துக்கு ரவியின் தோழியான கெனிஷா தான் காரணம் என்று தகவல் வெளியானது. இதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்து தாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று விளக்கம் அளித்தனர். இதனிடையே, ஜெயம் ரவி என்ற தன்னுடைய பெயரை ரவி மோகன் என்று அழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தற்போது ரவி மோகன் 'கராத்தே பாபு' படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் 'பராசக்தி' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற ஐசரி கணேஷ் இல்ல திருமண நிகழ்வில் கலந்து கொண்ட ரவி மோகனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளின் திருமணம் சென்னையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

இந்த திருமணத்தில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இத்திருமணத்தில் ரவி மோகனுடன் பெண் ஒருவரும் வந்திருந்தார். அந்த பெண் வேறுயாருமில்லை, பாடகி கெனிஷா தான். இருவரும் ஜோடியாக திருமணத்தில் பங்கேற்றதுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. புகைப்படத்தை பார்த்த பலரும் ரவி மோகன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா? என்றும் இருவரும் தங்கள் ரிலேஷன்ஷிப்பை சொல்லவே இப்படி ஜோடியாக வந்ததாகவும் கூறி வருகின்றனர். இதனிடையே ரவி மோகன்- ஆர்த்தி இருவரும் பிரிய இதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது. 
 

Leave a Reply