• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் போதைப்பொருள் பாவிக்க பணம் கொடுக்காத மனைவி - இளம் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு 

இலங்கை

யாழில் (Jaffna) போதைப்பொருள் பாவிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

அராலி - வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் வசந்தகுமார் (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்று காலை இவ்வாறு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு மனைவி, தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்

யாழில் போதைப்பொருள் பாவிக்க பணம் கொடுக்காத மனைவி - இளம் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு | Family Men Death In Jaffna

இதனால் மனவிரக்தியடைந்த குறித்த குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

யாழில் (Jaffna) உழவு இயந்திரத்தின் சக்கரத்தினுள் சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த துயர சம்பவம் நேற்று (07.05.2025) யாழ்ப்பாணம் - அராலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அராலி மேற்கு, வட்டுக்கோட்டை என்ற முகவரியை சேர்ந்த பத்மநாதன் தனீஸ்வரன் (வயது 38) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்றிரவு தனது உழவு இயந்திரத்தின் கீழே இறங்கி நின்றவாறு திறப்பினை இயங்க செய்துள்ளார்.

யாழில் போதைப்பொருள் பாவிக்க பணம் கொடுக்காத மனைவி - இளம் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு | Family Men Death In Jaffna

இதன்போது கியர் இயக்கத்தில் இருந்த உழவு இயந்திரம் திடீரென இயங்க ஆரம்பித்தது. இந்நிலையில் நிலைகுலைந்த குறித்த குடும்பஸ்தர் கீழே விழுந்ததால் அவர் மீது உழவு இயந்திரத்தின் சக்கரம் ஏறியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த குடும்பஸ்தர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


 

Leave a Reply