• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லாகூரை தொடர்ந்து கராச்சியிலும் குண்டுவெடிப்பு - பாகிஸ்தான் மக்கள் பீதி

'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை வான்வழி தாக்குதலை மத்திய அரசு நடத்தியது.

இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலை வருகிறது.

பாகிஸ்தானின் முக்கிய நகரான லாகூரில் விமான நிலையம் அருகே இன்று காலை குண்டு வெடித்தது. விமான நிலையம் அருகே உள்ள கோபால் நகர், நசீரா பாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அடுத்தடுத்து பலத்த சத்தங்கள் கேட்டதால் மக்கள் கடும் பீதியடைந்தனர்.

மேலும் அபாய ஒலி எழுப்பப்பட்டதால் மக்கள் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேறினர். மேலும் லாகூர் விமான நிலையத்திலும் அபாய ஒலி எழுப்பப்பட்டது. இதனால் பயணிகள் பீதியடைந்தனர்.

லாகூரில் குண்டு வெடிப்பு நடந்ததை போலீசார் உறுதி செய்தனர். விமானநிலையத்திற்கு அருகிலுள்ள வால்டன் சாலையில் ஒரு பெரிய குண்டுவெடிப்பு நடந்தது என்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானின் கராச்சியிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று காலை லாகூரில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்த நிலையில் தற்போது கராச்சியிலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்துள்ளது. பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததால் கராச்சியில் மக்கள் பதற்றமடைந்தனர்.
 

Leave a Reply