
பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பாடசாலைக்கு முன்னால் போராட்டம்
இலங்கை
கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.
பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு முன்னால் இந்த போராட்டம் இடம்பெறுகிறது.
குறித்த போராட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
இந்த போராட்டதால் டுப்ளிகேஷன் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உயிரிழந்த மாணவி குறித்த பாடசாலையின் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகம் இருப்பதாகவும், அதன் விளைவாக மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.
எனவே அந்த மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதேவேளை இன்று காலை கொழும்பு- கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த மாணவி, தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக, இன்று காலை கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்தா வீதிக்கு முன்பாக அமைதியான முறையில் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது