
இலங்கையின் உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு வீழ்ச்சி
இலங்கை
2025 ஏப்ரல் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு 3% குறைந்து 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இந்த தகவலை இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாத இறுதியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.53 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.