• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காந்தாரா திரைப் பட நடிகர் உயிரிழப்பு… சோகத்தில்  படக்குழு

சினிமா

காந்தாரா திரைப்படத்தில் நடித்த நடிகர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த திரைப்படம் ‘காந்தாரா’. ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெய்வமாக வணங்கும் ‘பஞ்சுருளி’ என்ற காவல் தெய்வத்தை மையமாக வைத்து உருவான இப்படம்  இந்திய மதிப்பில் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமான ‘காந்தாரா சாப்டர் 1’ உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காந்தாரா பட நடிகர் கபில் (ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்) உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  நடிகர் கபில் படப்பிடிப்பை முடித்த பிறகு, உடுப்பி மாவட்டத்தின் கொல்லூரில் உள்ள சவுபர்ணிகா ஆற்றில் குழிக்க சென்றுள்ளார். அப்போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

Leave a Reply