
5 நாட்களில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் செய்துள்ள வசூல்..
சினிமா
நடிகர் சசிகுமார் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால் கண்டிப்பாக தரமான படமாக தான் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை உண்டு.
அதுவும் சமீபகாலமாக அயோத்தி, நந்தன், கருடன் போன்ற தரமான படங்களை கொடுத்து வந்தார். அந்த வரிசையில் தற்போது டூரிஸ்ட் ஃபேமிலி எனும் படத்தை கொடுத்துள்ளார்.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சசிகுமார் உடன் இணைந்து முதல் முறையாக சிம்ரன் நடித்திருந்தார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்துள்ள இப்படம் 5 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 5 நாட்களில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரூ. 20 கோடி வசூல் செய்துள்ளது.