
இன்னும் 100 நாட்களில் கூலி..! வீடியோ வெளியிட்ட படக்குழு
சினிமா
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர்.
கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் படம் ரிலீஸ் ஆக இன்னும் 100 நாட்கள்தான் உள்ளது என்பது ரசிகர்களுக்கு ஞாபகப்படுத்தும் வகையில் படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது.