
மலையக ரயில் சேவைகள் வழமைக்கு
இலங்கை
பதுளையிலிருந்து புறப்பட்ட 1008 பயணிகள் ரயிலின் இயந்திரம் தடம் புரண்டதால் இடைநிறுத்தப்பட்டிருந்த மலையக ரயில் பாதையூடான ரயில் சேவைகள் இன்று (10) காலை 8:30 மணியுடன் முழுமையாக வழமைக்கு திரும்பியுள்ளது.
நேற்று (09) மாலை 6:00 மணியளவில் நாவலப்பிட்டி பல்லேகம பகுதியில் இந்த ரயில் தடம் புரண்டதால், அந்தப் பாதையில் ரயில் சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருந்தன.
இதனதால், கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் ரயில் கம்பளை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
அதே நேரத்தில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் ரயில் நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் இன்று (10) காலை வரை நிறுத்தப்பட்டது.
ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, தடம் புரண்ட ரயிலின் இயந்திரம் சுமார் 270 அடி முன்னோக்கி நகர்ந்து, மலைச்சரிவில் மோதி நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவத்தால் ரயில் தண்டவாளங்களுக்கும் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.