தென்னிந்திய சினிமா ஆணாதிக்க சினிமா - நடிகை ஜோதிகா ஓபன் டாக்
சினிமா
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா தற்போது பாலிவுட் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்.
கடைசியாக இவர் தமிழில் உடன்பிறப்பே என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் நேரடியாக OTT - ல் வெளிவந்திருந்தது. இதை தொடர்ந்து மலையாளத்தில் காதல் தி கோர் படத்தில் மம்மூட்டி உடன் இணைந்து நடித்திருந்தார்.
தற்போது பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் சைத்தான் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய திரைப்படங்கள் இந்தியில் வெளிவந்திருந்த நிலையில், இந்த ஆண்டு Dabba Cartel எனும் வெப் தொடர் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஜோதிகா தென்னிந்திய சினிமா குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " தென்னிந்திய சினிமாவில் ஆண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் தான் அதிகமாக உள்ளது. பெண்களை பாடல்களுக்கு நடனமாட வைப்பதற்கும், ஆண்களை புகழ்ந்து பேசுவதற்கும் மட்டும் தான் பயன்படுத்துகிறார்கள்.
அது தற்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், நான் வேறு பாதையை தேடினேன். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்தேன். பெரும் பாலும் உள்ள படங்களுக்கு நோ கூறியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.























