• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுற்றுலா பயணிடம் இலஞ்சம் கோரிய மூன்று பொலிஸார் கைது

இலங்கை

ஆஸ்திரிய சுற்றுலாப் பெண் பயணி ஒருவரிடம் இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தன்னிடமிருந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க 50,000 ரூபா பணம் வழங்குமாறு சந்தேகநபர்கள் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளுப்பிட்டி காவற்துறையில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரும் இரண்டு கான்ஸ்டபிள்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply