யாழ். பல்கலைப் பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்
இலங்கை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பேரவை உறுப்பினர்களாக 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பல் கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்னவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் உபவேந்தர், பீடாதிபதிகள், மூதவை பிரதிநிதிகள் இருவர் அடங்கிய உள்வாரி உறுப்பினர்கள் 15 பேருடன் மொத்தமாக 31 பேர் பேரவையில் இடம்பெறுவர்.
நேற்று 05.02.2025 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்றாண்டுகளுக் குச் செயற்படும் வகையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளவர்களின் விவரம் வருமாறு:-
பேராசிரியர் ஏ.எஸ். சந்திரபோஸ் ஓய்வு பெற்ற சமூகவியல் பேராசிரி யர்),
இ.பத்மநாதன் (முன்னாள் பிர தம செயலாளர் - நிதி),
ஏந்திரி திரு மதி எஸ்.வினோதினி (பிரதம பொறியி யலாளர், கட்டடங்கள் திணைக்களம்),
ஏந்திரி.ஏ.சுபாகரன் (திட்டப்பணிப்பாளர், ஏசியா பவுண்டேசன்),
வைத்திய நிபுணர் என். சரவணபவ (மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் நிபுணர்),
செல்வி ஷெ ரீன் அபதுல் சரூர் (எழுத்தாளரும், பெண் உரிமைச் செயற்பாட்டாளரும்).
கலா நிதி எம். அல்பிரட் (முன்னாள் பீடாதிபதி, பேராதனைப் பல்கலைக்கழகம்,
ஏந்திரி அ. குணாளதாஸ் (பட்டயப் பொறியியலாளர்),
என். செல்வகுமாரன் (முன்னாள் பீடாதிபதி, சட்டபீடம், கொழும்பு),
திருமதி வனஜா செல்வ ரட்ணம் (பணிப்பாளர், வட மாகாண தொழிற்றுறை திணைக்களம்),
டி. கே. பி.யூ. குணதிலக முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர், இலங்கை மின் சார சடை),
எம். ஜே. ஆர்.புவிராஜ் (முன்னாள் பணிப்பாளர், திறை சேரி),
பேராசிரியர் சி.சிவயோகநாதன் (வாழ்நாள் பேராசிரியர், பேராதனைப் பல்கலைக்கழகம்),
பி. ஏ. சரத்சந்திர (முன்னாள் அரச அதிபர், வவுனியா),
க. பிரபாகரன் (சட்டத்தரணி),
ஏ.எம்.பி. என். அபேசிங்க (மாகாணப் பணிப்பாளர், விவசாயத் திணைக்களம், வடமத்திய மாகாணம்)
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் ஏற்பாடு களுக்கமைய ஒவ்வொரு பல்கலைக் கழகத்தினதும் உள்வாரிப் பேரவை உறுப் பினர்களின் எண்ணிக்கையை விட ஓர் உறுப்பினர் அதிகமான எண்ணிக்கைக்கு வெளிவாரி உறுப்பினர்கள் பேரவைக்கு நியமிக்கப்படுவது வழமை யாகும். பல்கலைக்கழகப் பேரவை ஒன்றின் வெளிவாரி உறுப்பினராகத் தெரிவு செய்யப்படும் ஒருவர் ஒரு பட்ட தாரியாக இருத்தல் வேண்டும் அல்லது முகாமைத்துவத்தில் மீயுயர் தகைமை யைக் கொண்டிருத்தல் வேண்டும் என்ற அடிப்படைத் தகுதியுடன், பால்நிலை சமத்துவம், சமய ரீதியான பிரதி நிதித்துவத்துடன், சமூக நலன் சார்ந்த உயர் சிந்தனையுடைய நபர்களையே வெளிவாரி உறுப்பினர்களாக நியமிக்க லாம் என்ற வரையறை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வரையறுக்கப்பட்டிருக்கின்ற போதிலும், ஆட்சியதிகாரத்திலுள்ள கட்சிகளின் சிபார்சின் அடிப்படையிலேயே இதுவரை காலமும் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்கள் நியமனம் இடம்பெற்று வந்துள்ளமையும், யாழ்பாணத்தில் மிக நீண்டகாலமாக அமைச்சர் ஒருவரின் செல்வாக்கில் நியமனங்கள் வழங் கப்பட்டமையும் குறிப்பிடத்தக்க தாகும். (kalaimurasu)






















