• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட யோஷித்த ராஜபக்ஷவின் பாட்டிக்கு பிணை

இலங்கை

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட யோஷித்த ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவர் தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் பணமோசடி சட்டத்தின் கீழ் வாக்குமூலம் அளிக்க அவர் இன்று குற்றப் புலனாய்வுத் பிரிவுக்கு சென்றிருந்த நிலையில் அவர்  கைது செய்யப்பட்டிருந்தார்

மேலும் கைது செய்யப்பட்ட டெய்சி பொரெஸ்ட் கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படட்ட நிலையில் இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply