சிக்கந்தர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார்.
மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைப்படம் அடுத்தாண்டு ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வெளியாகவுள்ளது.
படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ஸோரா ஜபீன் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் ராஷ்மிகா மந்தனா மற்றும் சல்மான் கான் இணைந்து கலக்கலான நடத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பாடலின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.























