• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம்

இலங்கை

எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தை இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, அதன் துணைத் தலைவர் குசும் சந்தநாயக்க மற்றும் சாந்த சில்வா உள்ளிட்ட பணிப்பாளர்கள் குழுவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பான அறிக்கையைப் பெறுவதற்காகவே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தை அவமானப்படுத்தும் நோக்கில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை சீர்குலைக்க இந்த பிரதிநிதிகள் முயற்சிப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply