கனடிய பிரதமர் இங்கிலாந்து மன்னரை சந்தித்துள்ளார்
கனடா
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சால்ஸை இன்றைய தினம் சந்தித்துள்ளார்.
இங்கிலாந்தின் சான்றிங்கம் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவின் 51-ஆம் மாநிலமாக கனடாவை இணைக்க வேண்டும் என ட்ரம்ப் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா மீது அழுத்தங்களை பிரயோகித்து வரும் நிலையில் அந்த விவகாரங்கள் தொடர்பில் பேக்கிங்ஹம் அரண்மனை எவ்வித கருத்துக்களையும் இதுவரையில் வெளியிடவில்லை.
கனடாவின் இறையாண்மையை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கனடா இதற்கு பதிலளிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது.























