கிளாமர் லுக் தொகுப்பாளினி டிடி
சினிமா
தொகுப்பாளினி டிடி கிளாமர் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்தை தொட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
இவர் “காபி வித் டிடி” என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இந்த நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்காத வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.
டிடி தொகுப்பாளர் மட்டுமல்ல நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரும் சட்டப்படி பிரிந்து விட்டனர். தற்போது 38 வயதாகும் டிடி-க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.
விரைவில் இவரின் இரண்டாவது திருமணத்தை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இசை நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சி என ஸ்பெஷலான நிகழ்ச்சிகளில் மாத்திரம் பணியாற்றி வருகிறார்.
ஆளை மயக்கும் அழகு
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் டிடி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்வார்.
அந்த வகையில், கிளாமர் லுக்கில் இருக்கும் படங்களை பகிர்ந்துள்ளார். அத்துடன் அதில், அவர் அணிந்திருக்கும் ஆடை, சின்னத்திரை நடிகை சைத்திரா அனுப்பியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், “ டிடி புது பெண் போல் இருக்கிறார்..” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.






















