• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சாதனை படைத்த துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படம்.. 

இலங்கை

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் துல்கர் சல்மான். மலையாளத்தில் அறிமுகமாகி இருந்தாலும், தமிழ், தெலுங்கு என தொடர்ந்து மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் லக்கி பாஸ்கர்.

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி, குழந்தை நட்சத்திரம் ரித்விக், ராம்கி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

வித்தியாசமான திரைக்கதையில் அமைந்திருந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு நவ-28ம் தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் தற்போது வெளியாகி 13 வாரங்கள் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்த முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.  
 

Leave a Reply