
தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று
இலங்கை
தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று (27) நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி அமைச்சுக்கள் அண்மையில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டம் ஜூன் 02 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
உள்ளூட்சி தேர்தல் தொடர்பான வாக்குப்பதிவு ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் இன்றைய ஆணைக்குழுவின் கூட்டம் தீர்க்கமானதாக இருக்கும்.